காரைக்காலில் 88 பேருக்கு கொரோனா

காரைக்கால், ஏப்.18: காரைக்காலில் ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 92 ஆனது. கடந்த 16.4.2021 அன்று 486 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் காரைக்காலில் 18 பேர், திருநள்ளாறில் 11 பேர், கோவில் பத்து மற்றும் நெடுங்காட்டில் தலா 10 பேர், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி மற்றும் திருப்பட்டினத்தில் தலா 9 பேர், நிரவியில் 7 பேர், நல்லாத்தூர் மற்றும் நல்லம்பலில் தலா 2 பேர், காரைக்கால்மேட்டில் ஒருவர் என 88 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 5,553பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 4,720 பேர் குணமடைந்துள்ளனர். 745 பேர் சிகிச்சையிலும், தனிமைபடுத்தப்பட்டும் உள்ளனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 74 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து காரைக்காலில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது.

Related Stories:

More