×

2 பேர் உயிரிழப்பு 18,846பேருக்கு கொரோனா தடுப்பூசி

காரைக்கால், ஏப். 18:கொரோனா தடுப்பூசி 2 தவணைகளாக போடப்படுகிறது. காரைக்காலில் முதல் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 1,481பேருக்கும், முன்கள பணியாளர்கள் 1,675 பேருக்கும் 60வயதுக்கும் மேற்பட்டோர் 6,673 பேருக்கும், 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உடையவர்கள் 8,101பேருக்கும் என 17,930 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையாக சுகாதார பணியாளர்கள் 500 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 231 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட 109 பேருக்கும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 76 பேருக்கும் என 916 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல் தவணை இரண்டாம் தவணை எல்லாம் சேர்த்து 18,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல்...