நடிகர் விவேக் மறைவுக்கு சிறகுகள் இயக்கம் இரங்கல்

காரைக்கால், ஏப்.18: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து காரைக்காலில் உள்ள காரை சிறகுகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நம்மையெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த மாபெரும் கலைஞர், கலாமின் நம்பிக்கை நாயகன் இயற்கையின் இதயத்தில் இளைப்பாற சென்று விட்டார். அவர் செய்த பணிகளை தொடர்வதே அவருக்கான அஞ்சலி. சமூக சிந்தனை , சமூக சீர்திருத்தத்தை தன் மரணம் வரை தொடர்ந்த விவேக்கின் இயற்கை மீதான காதலையும், மரக்கன்று நடும் சேவையையும், காரைக்கால் காரை சிறகுகள் இயக்கம் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். இயற்கையில் கலந்த இயற்கையின் காதலனுக்கு இதய அஞ்சலி. இவ்வாறு காரை சிறகுகள் இயக்கம் தங்கள் இரங்கலை அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளது.

Related Stories:

More