கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று

கரூர், ஏப்.18: கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 46 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு கொரோ னா பரவலை முன்னிட்டு மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையான அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.கரூர் அரசு மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. முற்றிலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில், மக்கள் கொரோனாவை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில், திரும்பவும் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியது. கடந்த 9 நாட்களாக அடுத்தடுத்து பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனடிப்படையில், நேற்று முன்தினம் 31 பேர்களும், நேற்று ஒரேநாளில் 46 பேர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்பட்டுள்ளது.

Related Stories: