×

பிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர், ஏப்.18: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் திருவூருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, தீரன் சின்னமலை திருவூருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deeran Chinnamalai ,
× RELATED தீரன் சின்னமலை நினைவு நாள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை