வெங்கமேடு அருகே வலியால் அவதிப்பட்டவர் தூக்கு போட்டு தற்கொலை

கரூர், ஏப். 18: கரூர் வெங்கமேடு அருகே தவறி விழுந்த நிலையில் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெங்கமேடு இந்திரா நகர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(52). வீட்டின் அருகே நடந்து சென்றபோது, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், கடந்த 15ம்தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தொங்கினார். ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: