வி.கே.புரத்தில் 2 பேருக்கு கொரோனா

வி.கே.புரம், ஏப். 17: வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட புதுமனை தெருவில் 45 வயதான ஆண், வடக்கு ரத வீதியில் வசித்து வரும் 52 வயதான ஆணுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வி.கே.புரம் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் கணேசன்  தலைமையில் சுகாதார பணியாளர்கள், இருவரையும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தூவப்பட்டு சுகாதார பணிகள் நடந்தது.வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் அதிரடி ஆய்வு நடத்தி வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

Related Stories:

>