கொரோனா தொற்று அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஏப்.18:  எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சி கிராம பகுதிகள் நாமக்கல் நகராட்சி பகுதிகளையொட்டி உள்ளது. தற்போது இப்பகுதிகளில் பெரும்பாலானோருக்கு சளிக், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, கொரோனா தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சளி, காய்ச்சல் இருந்தால், சுயமாக மருந்து உட்கொள்ளாமல், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories:

>