கள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

நாமக்கல், ஏப்.18: கொல்லிமலையில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நாமக்கல் மதுவிலக்கு பிரிவு சார்பில் கொல்லிமலை செம்மேட்டில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மதுவிலக்கு எஸ்ஐ தேசிங்கன், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கள்ளச்சாராயம் குடிக்கும் பணத்தை குழந்தைகளின் கல்விக்கு செலவிடு, கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் கடவுள் வாழும் ஆலயம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. போதைப் பொருட்கள் பற்றிய புகார்களை 10581  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என  மதுவிலக்கு துறை போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>