பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கல்

கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 57,659 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடு வழங்கப்படுகிறது. இதற்கான பயிற்சி ஏடுகள் மற்றும் இனைப்பு புத்தக ஏடுகள் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன. இதேபோல், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி ஏடுகள் பெற வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் வந்து பயிற்சி ஏடுகளை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>