தந்தை, மகனை சரமாரி தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.18: கெலமங்கலம் அருகே செல்போன் வாங்கி தராமல் மோசடி செய்த பிரச்னையில் தந்தை, மகனை சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் அருகே கெலநாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்(20). கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(32) என்பவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ₹2 ஆயிரம் பணம் கொடுத்து, தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், இதுவரை சேகர் செல்போன் வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து, செல்போன் வாங்கிக் கொடு. இல்லையெனில், பணத்தையாவது திருப்பிக் கொடு என மனோஜ் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சேகர் மற்றும் அவரது தந்தை நஞ்சப்பா(55) ஆகியோர் சேர்ந்து, மரக்கட்டையால் மனோஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மனோஜ், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி(45) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்த கெலமங்கலம் காவல்நிலையத்தில் மனோஜ்  புகார் தெரிவித்தார். இதன்பேரில், எஸ்.ஐ பார்த்தீபன் வழக்குப்பதிந்தது சேகர், நஞ்சப்பா ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Related Stories:

>