×

கிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு

திருக்கோவிலூர், ஏப்.18:  திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (35), விவசாயி. இவரது மகன் கோபிகண்ணன் (3). நேற்று தனது வீட்டின் பின்னால் விளையாடி கொண்டிருந்தபோது அங்கிருந்த பாழடைந்த விவசாய கிணற்றில்  தவறி விழுந்தான்.  இதனை அறிந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோபிகண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார், குழந்தையின்  
சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மநத்தம் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED குடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில்...