செய்முறை தேர்வு இல்லாத பிளஸ் 2 மாணவர்கள் நாளை முதல் வீட்டில் இருந்து படிக்கலாம்

நாகர்கோவில், ஏப்.18: பிளஸ் 2 செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்கள் நாளை (19ம் தேதி) முதல் வீட்டில் இருந்தே படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:  குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளில் பயிலும் செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்களுக்கு 19.4.2021 முதல் ‘ஸ்டடி ஹாலிடேஸ்’ அறிவிக்கப்படுகிறது. செய்முறை தேர்வு நடைபெறும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் செய்முறை தேர்வு முடிவடையும் தேதிக்கு மறுநாள் முதல் ‘ஸ்டடி ஹாலிடேஸ்’ அறிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் 19.4.2021 முதல் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாளாகவும், சனிக்கிழமை விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

Related Stories:

>