×

கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி

மருத்துவமனையில் சிறப்பு உணவு இல்லை
அருப்புக்கோட்டை, ஏப். 18: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தனிப்பிரிவு உள்ளது. இங்கு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு இங்கு தனிமைப்படுத்தப்பட்டு நல்ல சிகிச்சையளிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு ஆரோக்யமான உணவு வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட 25 பேர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளனர். அங்களுக்கு சிறப்பு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்கள் அந்தப்பிரிவிற்கு சென்று உணவுகளை கொடுத்து வருகின்றனர்.
மேலும் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் உணவு தரமான முறையில் வழங்காததால் மருந்துவமனைக்கு வெளியே சென்று ஹோட்டல், டீக்கடைகளில் சென்று உணவு வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று அருப்புக்கோட்டையில் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டிட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்