×

அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்

தேனி, ஏப். 18: தேனி அருகே பூதிப்புரம் தனியார் மில் அருகே டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண்ணை அரசு அனுமதி பெறாமல் கடத்திச் சென்றதாக கனிமவளத்துறை உதவி இயக்குநர் சண்முகவள்ளி அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார், அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்த டேனியல்ராஜ் (35) என்வரை கைது செய்து கிராவல் மண்ணை கடத்திச் செல்ல பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல், கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்கு பின்புறம் முக்கால் யூனிட் கிராவல் மண்ணை அரசு அனுமதியின்றி டிராக்டரில் கடத்திச் சென்றதாக கொடுவிலார்பட்டி விஏஓ காந்தி அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார், அரண்மனைப்புதூரை சேர்ந்த மொக்கப்பிச்சை என்பவரை கைது, மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Gravel ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிகள்...