10 ஆண்டாக டிமிக்கி

கம்பம், ஏப். 18: திருட்டு வழக்கில் கடந்த 10 ஆண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பலே திருடனுக்கு, நீதிமன்றத்தில் ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கம்பம் நாட்டுக்கல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது வீட்டில் கடந்த 2012 ஆண்டு தங்க நகை, பணம் மற்றும் செல்போன் திருடு போனது. இது சம்மந்தமாக கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கில் திருச்சியைச் சேர்ந்த அல்லாபிச்சை (36) திருடியது உறுதி செய்யப்பட்டு, அவரை கம்பம் வடக்கு போலீசார் தேடி வந்தனர்.

 இந்நிலையில் அல்லாபிச்சை கம்பம், தேனி, கரூர், விருதுநகர், முசிறி, உடுமலை என தமிழகத்தின் பல ஊர்களில் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அல்லாபிச்சை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரியில், நாமக்கல்லில் அல்லாபிச்சை இருப்பதாக, கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து கம்பம் வடக்கு போலீசார், கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்த அல்லாபிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நேற்று நீதிபதி திரு.அருண்குமார், அல்லாபிச்சைக்கு ஒரு மாத சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: