விவசாயி கொலையில் ஒருவருக்கு ஆயுள்

சிவகங்கை, ஏப்.18: திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம்(35). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பெரியசாமிக்கும் வைகை ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு முத்துராமலிங்கத்தை பெரியசாமியின் சகோதரர் தெட்சிணாமூர்த்தி(30), அறிவழகன்(29), சேங்கைச்சாமி(35), இசக்கிராஜா(35), முத்தாண்டி(எ)சுப்பிரமணியன்(38), ஊமைத்துரை(38), நாராயணன்(40) ஆகிய 7 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சேங்கைச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

Related Stories:

>