கொரோனோ பாதுகாப்புடன் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்

சிவகங்கை, ஏப்.18:  சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்புடன் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. பிளஸ்2 செய்முறை தேர்வுகள் ஏப்.16 முதல் தொடங்கி ஏப்.24க்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 152 மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், மண் பதையியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ள பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே நடக்கிறது. தேர்வறைக்கான ஆசிரியர்கள் மட்டும் வேறு பள்ளிகளில் இருந்து வருகின்றனர். மாணவர்கள் செய்முறை தேர்வறைக்குள் செல்லும் முன்பாக டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை சரிபார்ப்பது, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, மாஸ்க் அணிவது, இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

Related Stories:

>