×

கல்வெட்டு படிக்க பயிற்சி


ராமநாதபுரம், ஏப்.18:  கல்லூரி மாணவ,மாணவியருக்கு இணைய வழியில் டெலிகிராம் செயலி மூலம் தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுகளை படிக்க அறிந்து கொள்ளும் பயிற்சி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் சார்பில் நடந்தது. இதில், மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டின் படங்கள் மூலம் தமிழ் எழுத்துகளை எழுத, படிக்க கற்று கொடுக்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு சேதுபதி கலை கல்லூரி, ராமநாதபுரம் அரசு மகளிர், பரமக்குடி, திருவாடானை அரசு கல்லூரிகள், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர் 40 பேர் கலந்து கொண்டனர். தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு நடத்தினார். அரசு அருங்காட்சியக  காப்பாட்சியர் சிவகுமார் பயிற்சி ஏற்பாடுகளை செய்தார். பயிற்சியில் பங்கேற்றோருக்கு அரசு அருங்காட்சியகம் சார்பில் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...