×

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு செயல் விளக்கம்


வத்தலக்குண்டு, ஏப்.18: நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தீயை எவ்வாறு அணைப்பது, எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது என்பது பற்றி பல்வேறு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Government Hospital Firefighting Demonstration ,
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை