திண்டுக்கல்லில் கொடிக்காய் சீசன் துவக்கம்

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் பகுதியில் கொடிக்காய் சீசன் துவங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது அதேவேளையில் கொடுக்காய்சீசன் துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வேடசந்தூர், பழனி போன்ற பகுதிகளில் இருந்தும் அதேபோல் வெளி மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கொடிக்காய் மரங்கள் ஒவ்வொரு தோட்டத்திற்கு 5 முதல் 10 மரங்கள் வைத்து சீசனுக்கு ஏற்ப விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது கொடிக்காய் சீசன் துவங்கியுள்ளதால், அதிகளவு விற்பனை நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் சாலையோரத்திலும், சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். கொடிக்காய்கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவு விரும்பி வாங்கி வருவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சீசனுக்கு மட்டும் கொடிக்காய் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

Related Stories: