மாணவர்கள் நடத்திய விவசாய கண்காட்சி

ஒட்டன்சத்திரம், ஏப். 18:  ஒட்டன்சத்திரம் அருகே குருநாதநாயக்கனூரில்  பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் விவசாய கண்காட்சி நடத்தினர். கிராமப்புற தோட்டக்கலைப்பணி அனுபவத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக ரெட்டியார் சத்திரத்தில் தங்கி கிராமமக்களுடன் தோட்டக்கலைப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக விவசாய கண்காட்சியினை குருநாதநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தினர். இதில் வரைபடங்கள், காய்கறிப் பயிர்களிள் மதிப்பு கூட்டல், பயிர் பாதுகாப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மண்மாதிரி எடுக்கும் முறை மண் வள அட்டை, பசுமைகுடில், நிழல் குடில்  ஒருங்கிணைந்த வேளாண் பண்ணயம் ,பயிர்முறை முதலியவற்றை கண்காட்சியில் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இக்கண்காட்சியை தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லக்குமார், தோட்டக்கலை அலுவலர் கவுதமன்  துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியை தோட்டக்கலை மாணவர்கள் பிரவீன், பிரேம்குமார், ரஞ்சித்குமார், ரெனின், சாம், சச்சிதானந்தம், சம்பித்குமார் உள்ளிட்ட மாணவர்கள் நடத்தினர்.

Related Stories: