×

திருநங்கைகள் தினநாள்

ஒட்டன்சத்திரம், ஏப்.18:  ஒட்டன்சத்திரத்தில் ஒயாஸிஸ் சார்பில் திருநங்கைகள் தினநாள் நடைபெற்றது. மூன்றாம் பாலினத்தவர் நமது சமூகத்தின் அங்கமாக அங்கிகரிக்கப்பட்ட நாள் திருநங்கைகள் தினநாளாக கொண்டாடப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வாக்குரிமை, ரேஷன்கார்டு, தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் சாசனப்படி அரசு அங்கீகாரம் தந்தது. இந்நாளை கொண்டாடும் வகையில் ஒயாஸிஸ் வளாகத்தில்,  திருநங்கைகள் மற்றும் சுயஉதவிக்குழுவினர், அறக்கட்டளை செயலாளர் எம்.முகமது நாசர், ஜூனைதா பேகம், பாலமுருகன், மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை