குடும்ப தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை

திருப்பூர், ஏப். 18: திருப்பூரில் குடும்பத்தகராறில் பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தேனி மாவட்டம் குமனைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் ரஞ்சித்குமார் (28). இவர் தனது மனைவி கீர்த்தனா மற்றும் 2 வயது மகனுடன் திருப்பூர் முருகம்பாளையம் பாரக்காடு 4-வது வீதியில் வசித்து வந்தார். மேலும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதேபோல் கடந்த வாரம் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மனைவி கீர்த்தனா தனது 2 வயது மகனுடன் தேனிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மனவேதனையில் இருந்த ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>