சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் கைது

திருப்பூர், ஏப். 18: திருப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (45). இவர் அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் 11ம் தேதி திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதில் அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டதால், கதிரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, இதற்கான ஆணையை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிரேசனிடம் போலீசார் வழங்கினர். திருப்பூர் மாநகரத்தில் இந்த ஆண்டு இதுவரை 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>