×

தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி,ஏப்.18: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணிமும்முரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். கோடையை கொண்டாட இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியில் பல லட்சம்  வண்ண மலர்கள் பூத்து குலுங்கும். அதேபோல், தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால், ஆண்டிற்கு ஆண்டு கோடையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சியை நடத்தவில்லை. இம்முறை இதுவரை மலர் கண்காட்சி நடத்தும் தேதி அறிவிக்கப்படவில்லை.

எனினும், மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீசனுக்காக தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாவரவியல் பூங்காவையும் துரித கதியில் ஊழியர்கள் தயார் செய்து வருகின்றனர். பூங்கா மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளை பராமரித்து வருகின்றனர். அவைகளுக்கு உரமிடும் பணிகள் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேேபால் சுற்றுலா பயணிகள் அதிகம் ெசல்லும் புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து புல் மைதானங்களும் சமன் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Botanical Garden ,
× RELATED தாவரவியல் பூங்கா வளாகத்தில் ராட்சத மரம் விழுந்து தடுப்புச்சுவர் சேதம்