மருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்

ஊட்டி,ஏப்.18: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தாட்பூட் (வால் குரட்டை) பழங்கள் சீசன் துவங்கிய நிலையில் தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு காடுகளில் ஏராளமான மரங்களில் படர்ந்துள்ள கொடிகளில் பழங்கள் காய்த்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் காணப்படும் பல்வேறு வகையான பழங்கள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளன. குறிப்பாக நாவல் பழம், தவிட்டு பழம், பிக்கி பழம், ஸ்ட்ராபெரி மற்றும் தாட் பூட் பழம் எனப்படும் வால் குரட்டை வகை பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இவற்றை பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி பொது மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இவற்றில் ஒரு சில பழங்கள் மருத்துவக்குணம் கொண்டதாக உள்ளது. இதில், வால் குரட்டை எனப்படும் தாட்பூட் பழங்கள் தற்போது நீலகிரி காடுகளில் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா பகுதிகளில் உள்ள மரங்களில் படர்ந்துள்ள கொடிகளில் தற்போது தாட் பூட் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன. தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, நீலகிரி வனங்களில் மருத்துவ குணம் கொண்ட பல வகையான பழங்கள் கிடைக்கிறது. இதில், வால் குரட்டை எனப்படும் தாட்பூட் பழமும் ஒன்று. இந்த வகை பழங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் அதிகளவு காணப்படுகிறது. இதில், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்து அதிகளவு உள்ளது. மேலும், இந்த பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியது. இந்த பழங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள், இவைகளை பறித்து உட்கொள்கின்றனர். சிலர் இதனை வியாபார ரீதியாகவும் பயன்படுத்துகின்றனர். ஊட்டியில் உள்ள பழக்கடைகளில் கூட இப்பழங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பலரும் வாங்கி உட்க்கொள்கின்றனர், என்றனர்.

Related Stories: