மாவட்டத்தில் கொரோனா விதிமீறல் 47 நாளில் ரூ.1.65 கோடி அபராதம் வசூல்

கோவை, ஏப். 18:  கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரூ.1 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: