கஞ்சா விற்ற 2 பேர் கைது

கோவை, ஏப்.18: கோவை சாயிபாபா காலனி போலீசார் நேற்று முன்தினம் கோவில்மேடு பாலத்தின் அடியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்றதாக பீளமேடு காளப்பட்டி பிரிவை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (24), திண்டிவனத்தை சேர்ந்த ஹரீஸ்வரன் (19) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.250 கி.கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>