×

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம்

ஈரோடு, ஏப். 18: ஈரோடு மாவட்டத்தில் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நாளை 19ம் தேதி தொடங்க உள்ளது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேற்று முதல் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு நாளை 19ம் தேதி முதல் நடைபெறும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 44 ஆயிரத்து 641 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வினை எழுத உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Erode ,
× RELATED பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது