×

11ஆயிரம் பேர் மாணவ, மாணவியர் பங்கேற்பு ஜிகார்னருக்கு செல்ல மறுத்து வரும் நிலையில் காந்திமார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

திருச்சி, ஏப். 17: திருச்சி காந்தி மார்க்கெட்டில் தடை விதித்தும் சில்லரை வியாபாரிகள் மொத்தம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதால் இரவு முதல் அனைத்து மொத்த, சில்லரை வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டோர் அதிகமானால் காந்திமார்க்கெட் மூடப்படலாம் என தகவலும் வெளியாகியுள்ளது. திருச்சியில் கொரோ னா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு அரசு தடை விதித்தது. அதற்கு பதிலாக பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்து சில்லரை வியாபாரத்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.அதன்படி, ஏப். 13ம் தேதி இரவு முதல் சில்லரை வியாபார கடைகள் ஜி.கார்னருக்கு செல்ல வேண்டும். ஆனால் நேற்று வரை அவர்கள் அங்கு செல்லாமல் தொடர்ந்து காந்தி மார்க்கெட்டிலே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் காந்திமார்க்கெட்டில் அனைத்து கேட்டுகளையும் பூட்டி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சில்லரை கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வியாபாரிகளுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் மொத்தவியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என இரு தரப்பினரும், காந்தி மார்க்கெட்டிலே இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கொரோனா வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி நேற்றிரவு வியாபாரம் நடந்தது. தங்களது கோரிக்கையின்படி காலை 6 மணியுடன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டனர். இதனால் மொத்த காய்கறிகளுக்கு லோடு இறக்குவதற்காக திறக்கப்படும் 1 முதல் 6 கேட்டுகள் பகல் முழுவதும் பூட்டப்பட்டிருந்தது.

மார்க்கெட்டில் மளிகை கடை, பூக்கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. நேற்று இரவு மாநகராட்சி ஆணையர் காந்திமார்க்கெட்டில் சோதனையிட்டார். அப்போது கொரோனா விதி மீறிய 10 கடைகளின் வியாபாரிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. வியாபாரிகள் இடம் மாறாததால் தொடர்ந்து விதிமுறைகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு முதல் அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனை முடிவில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் காந்திமார்க்கெட் மூடப்படலாம் என தெரிகிறது.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி