தீராத வயிற்று வலியால் மதுவில் விஷம் கலந்து குடித்து புது மாப்பிள்ளை தற்கொலை வலங்கைமான் அருகே சோகம்

வலங்கைமான், ஏப்.17: வலங்கைமான் அருகே உள்ள தேனாம்படுகை நடுப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் நல்லபிள்ளை மகன் மணிகண்டன்(29). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் கவுசல்யா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. மணிகண்டனுக்கு பல நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி கோவிந்தகுடி டாஸ்மாக் கடை அருகே மணிகண்டன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான 3 மாதத்தில் விவசாய கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>