தி.பூண்டி மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.17: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி வளாகத்தில் இயங்கும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமார் கூறுகையில், அரசு மருத்துவமனையில் இதுவரை 1,989 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து பற்றாக்குறை இல்லாமல் திருவாரூர் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்து உடனுக்குடன் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி மருந்து இல்லாதபோது தடுப்பூசி போட வருபவர்களின் பெயர், செல்போன் எண், ஆதார் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி வந்தவுடன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். 2வது கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்றார். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கவுரி கூறுகையில், ஆலத்தம்பாடி, திருத்தங்கூர், கொருக்கை, விளக்குடி மற்றும் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையகளில் இதுவரை முதல்கட்ட தடுப்பூசி 2,389 பேருக்கும், இரண்டாவது கட்ட தடுப்பூசி 196 பேருக்கும் போடபட்டுள்ளது என்றார்.

Related Stories: