×

ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.17: ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(30). என்பவர் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள கருவாட்டு ஓடை பாலத்தின் அருகில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

அவரை கைது செய்து, குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இதேபோல் வெத்தியார்வெட்டு இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் தனகோபால் (44). அரசு அனுமதியின்றி வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்து கொண்டு இருந்தபோது பிடித்த போலீசார் தனகோபாலிடமிருந்து குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Jayankondam ,
× RELATED வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில்...