×

மயிலாடுதுறை அருகே தாய், மகனை தாக்கிய வாலிபருக்கு வலை

மயிலாடுதுறை, ஏப்.17: மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் தெற்கிருப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன் மனைவி கனிமொழி (37) .ஊர் பொது பம்பில் சம்பவத்தன்று மாலை 6 மணி அளவில் குளித்துள்ளார். முன்னதாக புடவையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பம்படி அருகில் பத்திரமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் குளித்து முடித்ததும் பணத்தை எடுக்க மறந்து வீட்டிற்குச் சென்று விட்டார். உடைமாற்றிக்கொண்டு பணத்தை தேடியபோது குளித்த இடத்தில் வைத்தது ஞாபகம் வந்ததால் உடனடியாக குளித்த இடத்திற்கு சென்று தேடி பார்த்தபோது பணத்தை காணவில்லை. இதனால் திருடன் எங்கிருந்து வந்தான் என்று அங்கு நின்று திட்டியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு நின்றிருந்த சேகர் மகன் தர்மதுரை (30) என்பவர் யாரை திட்டுகிறாய் என்று கேட்டதற்கு என் பணத்தை திருடியவரை திட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தர்மதுரை எப்படி எல்லாரையும் திட்டலாம் என்று கேட்டு கனிமொழியை தாக்கியுள்ளார். அப்போது தனது தாயை தாக்குவதை கண்ட கனிமொழியின் மகன் தினேஷ்குமார்(20) ஓடிவந்து கேட்டதற்கு அவரையும் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். தினேஷ்குமார் காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயார் கனிமொழி அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தர்மதுரையை தேடி வருகின்றனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை எஸ்.பி.க்கு கொரோனா