×

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் கார்த்திகை வழிபாடு

சீர்காழி, ஏப்.17: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோயிலில் கார்த்திகை விழாவை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் செல்வமுத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Vaitheeswaran Temple ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்