பொதுமக்கள் கோரிக்கை மாட்டு வண்டியில் மணல் அள்ளிய 2 பேர் கைது

க.பரமத்தி, ஏப்.17: அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை தங்கராஜ் மகன் கவியரசு(23), அவரது தம்பி சீரஞ்சிவி (21), அதே ஊரை சேர்ந்த பாலுச்சாமி மகன் விஜயகுமார்(39) ஆகியோர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

Related Stories:

>