கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

கெங்கவல்லி, ஏப்.17:ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நாள்தோறும் 10க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆத்தூர் அண்ணா கலையரங்கில், நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி தலைமையில், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வர்த்தக கடைக்காரர்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறைப்படி கையாள  வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தினமும் கிருமிநாசினி பயன்படுத்தும் அளவுகளை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கிருமிநாசினி மற்றும் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு கையேடு மற்றும் முககவசம் அணிவதன் கட்டாயம் குறித்த ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள், வர்த்தகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: