மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூர், ஏப்.17: அரக்கோணம் அடுத்த சோகனூரில், கடந்த 7ம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று மேட்டூர் சின்ன பார்க் எதிரே தமிழ்நாடு தீண்டாமை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் இளைஞர்கள் மீது நடைபெறும் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சிஐடியூ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும்  திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>