கொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்

நாமக்கல், ஏப்.17: கொரோனா 2வது அலை பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், நினைவுசின்னங்களை மூடும் படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள நரசிம்மசுவாமி கோயில், ரங்கநாதர் கோயில்கள் நேற்று மூடப்பட்டன.

பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. அதே நேரம், கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வழக்கம் போல பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 9 மாதங்கள் இந்த இரு கோயில்களும் மூடப்பட்டிருந்தன.

Related Stories: