அரசு அலுவலர்களுக்கு அரையாண்டு, மொழித்தேர்வுகள்

கிருஷ்ணகிரி, ஏப்.17: அரசு அலுவலர்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் நடைபெறவுள்ளது. அரையாண்டு தேர்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழித்தேர்வுகள் வரும் மே மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், குரல் தேர்வு வரும் மே மாதம் 8ம் தேதி சென்னையில் மட்டுமே நடைபெறும்.

Revenue Survey & Finance வரும் தேர்வர்கள் உதவி / துணை கலெக்டருக்கான நில அளவை / கருவூல பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர் என்பதற்கான சான்றிதழினை சம்பந்தப்பட்ட கலெக்டரிடமிருந்து பெற்றிக்க வேண்டும். First Class Language Test Part-II தேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் குரல் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.எழுத்துத் தேர்வு மற்றும் குரல் தேர்வானது மே 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும். இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் (www.tnpsc.gov.in/www.tnpscexams.net) One Time Registration மூலம் வரும் 19ம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்வு கட்டணமாக பிரதி தேர்வு-மொழிக்கு ₹5 எனவும், தட்டச்சு செய்யப்பட்ட -எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்ட- நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த தேர்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும்.

Related Stories:

>