×

சம்பளம் வழங்குவதில் தாமதம் கன்னியாகுமரி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கன்னியாகுமரி, ஏப். 17: கன்னியாகுமரி  பேரூராட்சியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இவர்கள்  தூய்மைபணி, மின் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் ஆகிய  பிரிவுகளில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு தினசரி R615 சம்பளம் வழங்க அரசாணை  உள்ளது. ஆனால்R400 மட்டுமே வழக்கப்படுகிறது. அதுவும் 16ம் தேதி தான்  வழங்கப்படுகிறது. இந்நிலையில் 16ம் தேதி ஆன பின்னரும் கடந்த மாதத்திற்கான  சம்பளம் வழங்கவில்லை. எனவே பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை  கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், பேரிடர்  காலங்களில் நாங்கள் முக்கிய பணியாற்றினோம். ஆனால் எங்களுக்கு அரசு  நிர்ணயித்த சம்பளத்தை வழங்கவில்லை. அதுவும் காலம் தாழ்த்தி வழங்குகின்றனர்.  இதனால் நாங்கள் சிரமப்படுகிறோம். எனவே அரசு உத்தரவுபடி முழு சம்பளத்ைதயும்  வழங்க வேண்டும். அதை மாதத்தின் முதல்நாளில் வழங்க வேண்டும் என கூறினர்.

இத குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர்  சத்தியதாஸ், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் தொழிலாளர்களுக்கான சம்பள பணத்தை ஒப்பந்ததாரரிடம் வழங்கி விட்டதாகவும், ஒப்பந்ததாரர் நிதியை பெற்றுக்ெகாண்டு வங்கி விடுமுறை காரணமாக சம்பளம் வழங்காமல் இருப்பதாகவும், மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தொழிலாளர்களிடம் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,...