அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு குமரியில் இடி, மின்னலுடன் மழை

நாகர்கோவில், ஏப்.17 : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் குமரி மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது.  தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், வேர்கிளம்பி,  திருவட்டார், அருமனை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த இடி, மின்னலும் இருந்தது. மலையோர பகுதிகளிலும் பலத்த மழையால், அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்தது.  நேற்று காலை 8 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 39.70 அடியாக இருந்தது. பெருஞ்சாணி 52.75, சிற்றார்1, 5.54, சிற்றார் 2 - 5.64, பொய்கை 18, மாம்பழத்துறையாறு 14.68, முக்கடல் 4.8 அடியாகவும் உள்ளது.

Related Stories: