கலெக்டர் தகவல் ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறை

சிங்கம்புணரி, ஏப்.17: சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.  மருத்துவமனைக்கு தினமும் வெளி நோயாளிகளாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இதயநோய்  உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள்,  மருந்தாளுநர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.   

Related Stories: