உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.17: சிவகங்கை அரண்மனைவாசல் முன் உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமன், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் மோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணியம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் இக்னேசியஸ், முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சந்தியாகு, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: