வீட்டில் பதுக்கிய 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

இளையான்குடி, ஏப்.17: இளையான்குடி அருகே வீட்டிற்குள் பதுக்கிய ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் கைப்பற்றினார். இளையான்குடி அருகே சாலைக்கிராமம் ஊராட்சி அய்யம்பட்டியில் ரேஷன் அரிசியை கடத்தி வீட்டிற்குள் பதுக்கி வைத்துள்ளதாக இளையான்குடி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் நேற்று முன்தினம் அய்யம்பட்டி ராமு மகன் கோபால் வீட்டில் சோதனையிட்டனர். அதில் 40 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை இளையான்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப குடோனில் ஒப்படைத்தனர். கோபால் சென்னையில் குடும்பத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் அரிசி பதுக்கிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்குப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories:

>