தபால் சேவை பாதிப்பு

தேவகோட்டை, ஏப்.17: தேவகோட்டையில் தலைமைத் தபால் அலுவலகம் திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக ஸ்டாம்புகள், கவர்கள் விற்பனை செய்வதற்கும் பதிவு தபாலை அனுப்புவதற்கும் உரிய பணியாளர் இன்றி பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாம்புகள் வாங்க வரும் பொதுமக்கள் விற்பனை பிரிவில் ஆளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் திரும்பிச் செல்கின்றனர்.

இது குறித்து ரவிச்சந்திரன் கூறுகையில், தபால் நிலையத்தில் மக்களுக்கான சேவை செய்திட பணியாளர்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பெண் பணியாளர்கள் செல்போனில் கவனமாக இருக்கின்றனர். ஆள் பற்றாக்குறையை நிர்வாகம் நிறைவு செய்திட வேண்டும். என்றார்.

Related Stories:

>