×

கலெக்டர் அலுவலகத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திருப்பூர், ஏப். 17: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முக்கவசம்  அணியாமல் வந்த பொதுமக்களுக்கு நேற்று வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர். கொரோனா தொற்று இரண்டாம் அலையை தடுக்கும் பொருட்டு, பல்வேறு தடுப்பு பணிகளை அரசு நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது முகக் கவசம் அணியாமல் அலுவலக பணிகளுக்கு வந்த ஊழியர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். அதேபோல், ஆதார், இ-சேவை உள்ளிட்ட தேவைகளுக்காக முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.  அதே போல் கலெக்டர் அலுவலகத்தின் பின்பக்க நுழைவாயில் பகுதியிலும் வருவாய்த்துறையினர் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Collector's Office ,
× RELATED வேலூர் மாநகராட்சி, கலெக்டர்...