பராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஊட்டி,ஏப்.17: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மன வளர்ச்சி குன்றிய மாற்று திறனாளிகள், கடும் ஊனமுற்ற மாற்று திறனாளிகள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் என மொத்தம் 2,325 பயனாளிகளுக்கு 2021-2022ம் நிதியாண்டில் பராமரிப்பு உதவித்தொகை வழங்க தயார் நிலையில் உள்ளது.  பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்று திறனாளிகள் உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்ற சான்றினை தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து உரிய படிவத்தில் பெற்று மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்து பயன்பெறலாம்.

Related Stories:

>