×

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம்

ஊட்டி,ஏப்.17:  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை 80 பள்ளிகளை சேர்ந்த 7,106 மாணவ, மாணவியர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது. தொழிற்பிரிவு, உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பல்ேவறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. கொரோனா பரவல் உள்ளதால் மாணவர்கள் தனிமனித இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்பட்டது. ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசரூதின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வு வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...